வவுனியா கோவில்குளம் ரொக்கெற் விளையாட்டுக்கழகத்தின் தீபாவளி வு20 துடுப்பாட்ட போட்டியின் இறுதிப்போட்டி 29.10.2016 அன்று கழகத்தின் தலைவர் திரு பார்த்தீபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் இறுதி போட்டியில் சார்ள்ஸ் விளையாட்டு கழகம் எதிர் பரலோக மாதா விளையாட்டுக் கழகங்கள் மோதின இதில் பரலோக மாதா அணியினர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ் இறுதிப்போட்டியின் பிரதம அதிதியாக புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக முன்னாள் அதிபர் திரு சிவஞானம், வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சங்க தலைவர் திரு ரவிச்சந்திரன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு மு.கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு காண்டீபன், ஆசிரியர் நிரஞ்சன், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரவிச்சந்திரன், கழக முக்கியஸ்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள், இளைஞர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.