jaffna-university-studentயாழ் பல்கலைக்கழக உபவேந்தர், பிரதான பேராசிரியர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். அண்மையில் அப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

இதன்படி அவர்கள், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் இதன்போது உடனிருந்துள்ளனர். இந்த சந்திப்பில், பிரேதப் பரிசோதனை அறிக்கையை விரைவில் தயாரிக்க சட்டமா அதிபரால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதற்கு இணங்க, அதனை பெற்றுக் கொண்டு குறித்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.