europe-parliament-groupநாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழு வலியுறுத்தி உள்ளது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னரும், யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த சில தமிழ் மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் வன்முறை, சித்திரவதை என மனித உரிமை மீறல்களும் இலங்கையில் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழு வலியுறுத்தி உள்ளது என செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தலைவர் ஜான் லம்பெர்ட் கூறுகையில், “மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தால் மட்டும் தான் இலங்கை தனக்கு தேவையான சிறப்பு வர்த்த சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து மீண்டும் பெற முடியும் எனக் கூறியுள்ளார். மேலும், கடுமையான பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.