Header image alt text

mahindaமலர் மொட்டினை சின்னமாகக் கொண்ட அபே சிறீங்கா நிதகஸ் பெரமுன (எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி) கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சிறீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி) என குறித்த கட்சி தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் புதிய தலைவராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more

kilinochchi-marketகிளிநொச்சி நகரத்தில் 2016 செப்டெம்பர் 16ஆம் திகதியன்று ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தாக்கல் செய்திருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில் 74 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் 122 பேர் பாதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

jaffna-university-studentயாழ் பல்கலைக்கழக உபவேந்தர், பிரதான பேராசிரியர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். அண்மையில் அப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

இதன்படி அவர்கள், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் இதன்போது உடனிருந்துள்ளனர். Read more

jaf.university (2)யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றச் செயற்பாடுகள், இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம், 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். Read more

wwwஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் வைத்து கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து இதற்கான நியமன கடிதத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பெற்றுக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

diran-alasராடா நிறுவனத்தின் ஊடாக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், சாலிய விக்ரமசூரிய, ஜயன்த டயஸ் சமரசிங்க உள்ளிட்ட மூவரையும் நவம்பர் மாதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பேதே நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததால் குறித்த மூவரும் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். Read more