Header image alt text

dddddddddddddமுல்லைத்தீவு பிரமகுமாரிகள் ராஜயோக நிலையத்தின் கட்டிட சீரமைப்பு பணிகளுக்கு நிதியுதவியும், குமுழமுனை கலைவாணி சனசமூக நிலையத்திற்கு வாத்திய கருவிகளையும் மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள் வழங்கியதோடு அவற்றுக்கான தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள் தனது மாகாணசபை உறுப்பினருக்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் ஊடாக மேற்படி உதவிகளை வழங்கியுள்ளார். Read more

ranil wickrama15 ஆவது ஜேர்மனிய வியாபார ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹொங்கொங் சென்றுள்ளார்.

இன்று காலை பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக ஹொங்கொங் சென்றுள்ளனர். ஆசிய பசுபிக் வலய வர்த்தகர்கள் மற்றும் ஜேர்மனிய வர்த்தகர்களுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்காக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின் நடைபெறும் முதலாவது மாநாடு இதுவாகும். ஹொங்கொங் விக்டோரியா துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஹொங்கொங் சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மண்டபத்தில் இன்றுமுதல் எதிர்வரும் 05ம் திகதிவரை இம்மாநாடு இடம்பெறுகிறது. Read more

police-station-jaffnaயாழ்ப்பாண பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் தண்டனை இடமாற்றம் பெற்றதையடுத்து, ஊர்காவற்துறை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட கேமவிதான நேற்று யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிமை வாளுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணம் செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர். Read more

mangala (4)இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கு அமைச்சர்களான மங்கள சமரவீரவும், மஹிந்த அமரவீரவும் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேஷி கொலன்கே தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெறவுள்ளது. வெளிவிவகார அமைச்சர், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரும் இலங்கை சார்பில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளவுள்ளனர். Read more

sanjeevaniசபாநாயகர் கரு ஜயசூரியவின் இரண்டாவது மகளான, சஞ்ஜீவனி இந்திரா ஜயசூரிய (வயது 40) புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர், திருமணமாகி இங்கிலாந்தில் வசித்து வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். இவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அவரது குடும்பத்தினர், இங்கிலாந்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் இளைய மகளான சஞ்சீவனி இந்திரா ஜயசூரிய மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வயிற்றில் வளர்ந்த குழந்தைக்காக குறித்த நோயிற்கு சிகிச்சைபெறாது உயிர் துறந்துள்ளார். Read more

armyதமக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரி, சேவையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்ச்சியாக போராடி வந்த நிலையில், தற்போது சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஓய்வூதியம் பெற நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையான 12 வருடங்களை பூர்த்தி செய்யாது இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் கடந்த 31ம் திகதி முதல் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். Read more

ffffffffffffஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் இறக்காமம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாயக்கல்லி மலைமீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை திடீரென வந்த பௌத்த பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவினரால், தமிழ் கிராமமான மாணிக்கமடுவை அடுத்துள்ள மாயக்கல்லி மலைமீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. Read more

police ...யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவியான வித்யாவின் படுகொலைக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரை, விடுவிக்குமாறு ஆலோசனை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில்,

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை கைதுசெய்வதற்கான ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.