police-station-jaffnaயாழ்ப்பாண பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் தண்டனை இடமாற்றம் பெற்றதையடுத்து, ஊர்காவற்துறை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட கேமவிதான நேற்று யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிமை வாளுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணம் செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.இருப்பினும் குறித்த கைது தொடர்பில் மேலதிகாரிகளிற்கு அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் பதில் பொறுப்பதிகாரி முல்லைத்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். யாழ் பொலிஸ் நிலையம் புதிய கட்டடத்தில் இயங்க ஆரம்பித்து ஒரு மாத காலமே முடிவுற்ற நிலையில் மூன்று பொறுப்பதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.