வவுனியா நகரசபையின் புதிய செயலாளராக இராசையா தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் மன்னார் பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய இவர், நேற்றைய தினம் வவுனியா நகரசபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வவுனியா நகரசபையின் செயலாளராக இருந்த ரி.தர்மேந்திரா, யாழ்ப்பாணம் உள்ளுராட்சி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து குறித்த பதவிக்கு வெற்றிடம் நிலவியது. இதனையடுத்தே வவுனியா நகரசபைக்கு புதிய செயலாளராக இராசையா தயாபரன் நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.