dddயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஐந்து பொலிஸாரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எஸ்.சதீஸ்கரன் உத்தரவிடப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐந்து பேரும், கடந்த 22ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டதை அடுத்து அவர்கள் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே சந்தேகநபர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.