நுவரெலியா கலுகலை அபேபுர பகுதியில் இன்று மண்மேடொன்று சரிந்து விழுந்தத்தில், அதில் புதையுண்ட ஐவர், மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நுவரெலியா கலுகலை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அபேபுர பகுதியில், புதிதாக அமைக்கப்பட்டுவரும் கட்டடமொன்றில், பணியாட்கள் கடமையில் ஈடுபட்டிருந்துள்ளனர். Read more