Header image alt text

humanபயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் யாழ். கொக்குவில், திருநெல்வேலி மற்றும் சில்லாலைப் பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.

கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் கபில்நாத், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கெங்காதரன் பிருந்தாபன், சில்லாலைப் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் அரவிந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
Read more

14958086_1234278436593954_510640791_oவவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் கல்லூரி அதிபருமான திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் 05.11.2016 சனிக்கிழமை அன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

வவுனியா இரத்த வங்கியின் தேவை கருதி வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளிற்கிணங்க பழையமாணவர் சங்கத்தின் ஓர் சமூக சேவையாக நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

vali-northயாழ். வலிகாமம் வடக்கில் கையளிக்கப்பட்ட காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி காங்கேசன்துறை தெற்கு, வேவெரிக் கிராமத்திற்கான காணிகளை சுத்தப்படுத்தி அடையாளப்படுத்தும் நடவடிக்கை இன்றுகாலை ஆரம்பிக்கப்பட்டதாக ஜே 235 கிராம சேவகர் நடேசபிள்ளை ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரிடமிருந்த வேவெரிக் கிராமத்தை சேர்ந்த 20 குடும்பங்களுக்கான காணி கடந்தவாரம் ஜனாதிபதியால் காணி உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. அந்த காணிகளில் மக்கள் பிரவேசிப்பதற்கு நேற்று அனுமதியளிக்கப்பட்டது.
Read more

armyகடமையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும், கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக குறித்த ஓய்வூதியத்தை வழங்கவுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
Read more

policeபதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் இடம்பெறும் 85வது சர்வதேச பொலிஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று அதிகாலை பூஜித்த ஜெயசுந்தர அந்த நாட்டுக்கு சென்றுள்ளார். Read more

maithripalaஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

புகையிலை பயன்பாட்டை குறைப்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த மாநாடு நாளையும் நாளை மறுதினமும் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. Read more

vigneswaranதமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் எனக்கில்லை என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது வடக்கு முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஒரு பத்திரிகையில் வெளிவருகின்ற செய்திகள் உண்மைத் தன்மையை கொண்டிருத்தல் வேண்டும். Read more

ceylon-human-right-commisionமனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கையில் சித்திரவதைகள் மற்றும் கொடுமையான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டமா அதிபரும் காவல் துறை மா அதிபரும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

சித்திரவதைகளுக்கு எதிரான தமது ஐந்தாவது மீளாய்வு அறிக்கையிலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. Read more

Sampanthan (3)தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த தீர்வினையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சர்வதேச பங்களிப்புடன் இராஜதந்திர போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நாட்டின் ஆட்சியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாடு சர்வாதிகார போக்கில் போய்க்கொண்டிருந்தது. நாடு முழுவதையும் பொருத்தவரையில் சர்வாதிகாரம் நிகழ்ந்தது. Read more

img_2413பெரிதும் யுத்தத்தினால் பாதிக்கபட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் கணவனை இழந்து தவிக்கும் 6000க்கும் மேற்பட்ட விதவைகளை கொண்ட அமைப்பான அமரா பெண் தலைமை தாங்கும் ஒன்றியத்தில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயளர் பிரிவுக்குட்பட்ட அமரா பெண் தலைமைதாங்கும் ஒன்றியத்தில் இருந்து தேர்வுசெய்யபட்ட பயனாளிகளின் 32 பிள்ளைகளுக்கு

பிரித்தானிய தொண்டு நிறுவனமான PATH TO THE FUTURE (எதிர்காலத்திற்கான பாதை) அமைப்பினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் இன்று வள்ளிபுரம் பகுதியில் உள்ள இனிய வாழ்வு இல்லத்தில் வைத்து அவர்களிடம் ஒப்படைக்கபட்டன.
Read more