வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நாம் அன்று தெரிவு செய்தது சரி என நான் நினைக்கிறேன’; என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாளிதழ் ஒன்றின் சிறப்பு இதழ் வெளியீடு, யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வடக்கு மாகாண தேர்தல் நடாத்துவதற்கு முடிவு வந்த போது முதலமைச்சர் தெரிவு என்பது ஒரு முக்கிய விடயமாக இருந்தது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று கூடி ஆராய்ந்தது.
அதற்கு முன்பே, சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. பின்பு அது ஏக மனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்றார்.