வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் கல்லூரி அதிபருமான திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் 05.11.2016 சனிக்கிழமை அன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா இரத்த வங்கியின் தேவை கருதி வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளிற்கிணங்க பழையமாணவர் சங்கத்தின் ஓர் சமூக சேவையாக நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.