armyகடமையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும், கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக குறித்த ஓய்வூதியத்தை வழங்கவுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெரும் கால எல்லை நிறைவடை முன்னர் (12 வருடங்கள்) கடமையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் தமக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரி போராடி வருகின்றனர்.

வர்களில் மூவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.