Header image alt text

sdfdயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பெண்கள் மற்றும் விதவைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக ஐ.நா. மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனெஸ் அனெலி தெரிவித்துள்ளார் .

வடக்கு கிழக்கில் மனித உரிமைகள் மற்றும் உதவி தேவைப்படும் சிறுவர்கள் பெண்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். Read more

army-protestகடந்த எட்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. ஓய்வூதியம் வழங்கத் தகுதியான கால எல்லைக்கு முன்னதாக (12 வருடங்கள்) அங்கவீனமுற்ற நிலையில் சேவையில் இருந்து இடைவிலகிய முன்னாள் இராணுவ வீரர்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

தமக்கு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியே அவர்கள் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர். Read more

sri-kantha-teloயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைகள் குறித்து, விரிவாக ஆராய, ரெலோ ஏழு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கட்சிகள் இன்று வல்லை வெளியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளன.

இதில், இலங்கைத் தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஏழு கட்சிகள் கலந்து கொண்டன. இங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு ரெலோ கட்சியைச் சேர்ந்த என். சிறிகாந்தா கருத்துத் தெரிவிக்கையில்,
Read more

sampanthanகிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தனது கணவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி, கிளிநொச்சிக்கு, நேற்று விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் போராளியான 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நடராசா சபேஸ்வரன் என்பவர், கடந்த 23ஆம்திகதி விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவரிடம் அவரது மனைவி குறிப்பிட்டார்.
Read more

mahinda-desapriyaஎல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவடைந்துள்ள மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்தான சட்டத்தன்மையை மீளாய்வு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சட்டமா அதிபருக்கு கடிதமொன்றை இன்றையதினம் அனுப்பிவைத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்தக்கோரிக்கையை விடுத்திருக்கிறார். Read more

uthayanka weeratungaரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

தனது வங்கிக்கணக்கை முடக்கியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.இதன் பிரதிவாதிகளாக மத்திய வங்கியின் நிதிப் பணிப்பாளர், காவற்துறை நிதி குற்றங்கள் பிரிவின் தலைமை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 8 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. Read more

mcயாழ். மாநகர சபையில் அமைய அடிப்படையில் தொழில்புரியும் சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 127 சுகாதார ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை இந்த பணிபகிஷ்கரிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.