ranilமஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் தலைவராக இருந்த முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டிசில்வாவில் நினைவு பேருரையில் பங்கேற்று உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.மறைந்த டி சில்வா தலைமையிலான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சர்ச்சைக்குரியவை, சில விடயங்களுடன் நான் இணங்குகின்றேன்.

ஏனைய விடயங்களுடன் இணங்கப்போவதில்லை. சர்ச்சைகளை தாண்டி நீதித்துறை இருக்க வேண்டும் என டி சில்வா நம்பியதாக குறிப்பிட்ட பிரதமர், நீதித்துறை சர்ச்சைக்குரியதாக இருந்தால் சட்டவாட்சி பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

டி சில்வா சட்டவாட்சியை நிலைநிறுத்தியதாகவும் எவ்வாறான வேறுபாடுகள் காணப்பட்டாலும் சட்டவா ட்சியை நிலைநிறுத்த அனைவரும் கடமைப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். சட்டவாட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு பங்களிப்பு வழங்கியர் என்ற வகையில் டி சில்வா தொட ர்பில் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.