sri lanka chinaஇலங்கையுடன் ஒரு குற்றவியல் நீதித்துறை உதவி ஒப்பந்தமொன்றில் சீனா கையொப்பமிட்டுள்ளதை சீனாவின் உயர் சட்டமன்றம் அங்கீகரித்துள்ளதாக சீனாவின் அலுவலகச் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் குழு விடுத்த அறிக்கையில் சீனாவின் அடிப்படைச் சட்டத்திற்கமைய நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தைகளின் முடிவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமீபகாலங்களில் சீனாவுடனான வர்த்தக,கலாசார, உல்லாசப் பயணத்துறைகளில் மிக நெருக்கமான உறவு நிலையை இலங்கை எட்டியுள்ளது. நீதித்துறை உதவிகள் பலப்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன என்று சீனாவின் பிரதி வெளிநாட்டு அமைச்சர் லியூ சென்மின் குறிப்பிட்டுள்ளார்.