xvxcvcvவிஞ்ஞானம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய விடயங்களில் ஒத்துழைப்பு வழங்க இலங்கை – கியூப அரசுகள் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

ஒக்டோபர் 31இலிருந்து நவம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெற்ற சர்வதேச விஞ்ஞான, தொழில்நுட்ப, புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாநாட்டிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கியூபாவின் விஞ்ஞான,தொழில்நுட்ப, சுற்றுப்புறச் சூழல் அமைச்சரான எல்பா ரோசா பெரஸ் மொன்ரோயா என்பவருக்கும் இலங்கையின் விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் கைச்சாத்திடப்படடுள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் கைகோர்த்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, வளர்ந்துவரும் நாடுகள் விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியாக மாறவேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மாநாட்டில் பங்குபற்ற அழைப்பு விடுத்த கியூப அரசிற்கு நன்றி கூறிய அமைச்சர், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கியூப நாட்டு அமைச்சருக்கு விடுத்த அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.