vasகொலைக்குற்றம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பான வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக, உயர் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக அறிவித்துள்ளார்.

மரணதண்டனை கைதியான வாஸ் குணவர்தன, புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி இவ் அறிவித்தலை விடுத்துள்ளார். எனினும், தாம் குருநாகல் உயர் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியபோது, குறித்த பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக வாஸ் குணவர்தன கடமையாற்றியதாகவும்,

ஒரே பிரதேசத்தில் கடமையாற்றியதால் அவர் தொடர்பான விசாரணைகளிலிருந்து விலகிக் கொள்வதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.