Header image alt text

donald-trumpகருத்துக் கணிப்புக்களைப் பொய்யாக்கி 267 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப்பை அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக தேர்வு செய்த மக்களுக்கும் அவரது வெற்றிக்காக கடுமையான உழைத்த குடியரசுக் கட்சியினருக்கும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹிலாரி கிளிண்டனுக்கு 218 வாக்குகளே கிடைத்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற்ற டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு அளிக்கப்பட்டுள்ள தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read more

raviraj“சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை மரணம் என்றும் அழித்து விடுவதில்லை”. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள். ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் எனது தென்மராட்சி மண்ணை உலகுக்கே தெரியபடுத்திய ஒருவர் என்றால் மிகையாகாது.- கலாநிதி .ந. குமரகுருபரன்

எமது இளந் தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறு நடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான எனது நண்பன் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் ஒரு தசாப்தங்கள் நிறைவு பெறுகின்றது. இப்போது எமது ரவிராஜ் உயிரோடிருந்தால் வடக்கு அரசியல் தலைமைக்கு வீரியம் சேர்த்திருப்பார்.
Read more

electionமுல்லைத்தீவு மாவட்டத்டதின் புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்றுப் பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் நடைபெற்றுள்ளது. இதன்போதே, இந்த அனுமதி தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

dfsgfgகனேடிய வெளிவிவகாரங்கள் (வெளிநாட்டு அலுவல்கள், வியாபாரம் மற்றும் அபிவிருத்திப்பிரிவு) ஆய்வாளர் மக்லாரன் மற்றும் கனேடிய அரசியல் உயர் ஆலோசகர் அலுவலகத்தின் ஆய்வாளர் ஜவாத் குரேஷி ஆகியோர் இன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம் தொர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

maithri ranilஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாண்டு நிறைவில் புதிய அரசியலமைப்பும், நாட்டிற்கான புதிய அபிவிருத்தித் திட்டமும் நடைமுறைக்கு வருமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாதுலுவாவே சோபித தேரரின் ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். Read more

Sampanthan (3)புதிய அரசியலமைப்பின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு தமது உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கிலுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாய நாடுகள் தொடர்பான பிரித்தானிய அமைச்சர் ஜோய்ஸ் எனேல் மற்றும் சம்பந்தனுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Read more

courts (1)புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்களை, மேலும் மூன்றுமாத காலத்துக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றுக்கு, யாழ்.மேல் நீதிமன்றம், இன்று அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில் 12 சந்தேகநபர்கள் இதுவரைக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more

parliamentமாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் கொன்சியூலர் அலுவலகங்கள் இரண்டை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

வவுனியாவை விடவும் யாழ்ப்பாணம் சிறந்தது என்றும் இதன்போது அறிவிப்பு விடுக்கப்பட்டது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போதே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.