donald-trumpகருத்துக் கணிப்புக்களைப் பொய்யாக்கி 267 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப்பை அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக தேர்வு செய்த மக்களுக்கும் அவரது வெற்றிக்காக கடுமையான உழைத்த குடியரசுக் கட்சியினருக்கும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹிலாரி கிளிண்டனுக்கு 218 வாக்குகளே கிடைத்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற்ற டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு அளிக்கப்பட்டுள்ள தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் (69) ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவியது.

நேற்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.39 மணிக்கு) ஓட்டுபதிவு தொடங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு) ஓட்டுப்பதிவு முடிந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஒவ்வொரு மாகாணமும் ஓட்டு எண்ணிக்கையை தொடங்கியது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் ஓட்டு முன்னணி நிலவரங்களும் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஹிலாரி, டிரம்ப் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றாலும் சிலமணி நேரங்களில் இந்த நிலைமை தலைகீழாக மாறியது. டிரம்ப் அதிக இடங்களில் முன்னிலை பெற்றார். மத்திய மற்றும் மேற்கு பகுதியில் டிரம்ப் அதிக மாகாணங்களில் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். அதே நேரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கூடுதல் ஓட்டுகள் பெற்றார்.

அதன்படி குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் டெக்காஸ், சவுத் கரோலினா, ஒகியோ, வெஸ்ட் வெர்ஜீனியா, அலபாமா, இண்டியானா, சென்டக்கி டென்னஸ்சி, மிசிசிப்பி, மிசோரி, அர்கன் சாஸ், லவுஸ்லானா, வடக்கு டகோபா, தெற்கு டசோபா, நெப்ரஸ்கா, கன்சாஸ், ஒல்காமா, மர்னடனா, விசாமி, சிகாகோ ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கலிபோர்னியா, நியூயார்க், நியூஜெர்சி, மேரிலேண்ட், கொலம்பியா டி.சி. வெர் மாண்ட், மாசா சூசெட்ஸ், சேவல், கனெக்டிகட், எலே வார், ரோடோதீவு, இல்லினாய்ஸ், கலோரெடா, நியூ மெக்சிகோ ஆகிய மாகாணங்களை கைப்பற்றியுள்ளார்.

குறிப்பாக வெற்றியை நிர்ணயிக்கும் பெரிய மாகாணங்களின அதிக ஓட்டுகள் கொண்ட டெக்சாஸ், புளோரிடாவை கைப்பற்றினார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிக ஓட்டுகள் கொண்ட கலிபோர்னியாவை கைப்பற்றினார். இவை தவிர மைனே (4), மின்னசோட்டா (10), லோவா (6), ஒரேகா (7) ஆகிய மாகாணங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரை மக்களின் அமோக ஆதரவை பெற்று இருந்தாலும் அவர் வெற்றி பெறமுடியாது. எலெக்டோரல் காலேஜ் என்றழைக்கப்படும் தேர்தல் சபையில் உள்ள 538 தேர்வாளர்களில் 270 பேரின் வாக்குகளை பெறுபவர்கள் அதிபராக முடியும்.

தற்போதைய நிலவரப்படி வெற்றிக்கு தேவையான 270 வாக்குகள் என்ற இலக்கை தாண்டிய டிரம்ப் 276 வாக்குகள் பெற்றுள்ளார். எனவே, அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹிலாரிக்கு 218 வாக்குகளே கிடைத்துள்ளன.

தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் ஹிலாரிக்கு சாதகமாகவே இருந்தன. ஒருசில நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் மட்டுமே டிரம்ப் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தன. இந்த கணிப்புகளை பொய்யாக்கி, டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டொனால்டு டிரம்ப் இன் ஆதரவாளர்கள் அவரது வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியை அடுத்து நியூயார்க்கில் தனது ஆதரவாளர்களிடையே டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
அமெரிக்காவின் அதிபராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனது வளர்ச்சிக்குக் காரணமான பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நாட்டிற்கு நீண்டகாலம் சேவையாற்றிய ஹிலாரிக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

8 மாத பயணத்தின் இறுதியாக மிகச்சிறந்த வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். ஹிலாரியும் வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் போராடினார். இனி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டு செயல்படவேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டால் நமது கனவுகளை செயல்படுத்தலாம்.

நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் அதிபராக பணியாற்றுவேன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும். அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டமுள்ளது. அமெரிக்காவை நண்பனாக நினைக்கும், அமெரிக்காவுடன் நட்பு கொள்ள விரும்பும் நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்துவோம் என்றார்.