Header image alt text

budget-2நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவதும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 70ஆவதும் வரவு செலவுத் திட்டத்தின் மொத்த வருமானம் 2098 பில்லியன் ரூபாயாகவும் மொத்த செலவீனம் 2723 ரூபாயாகவும் காணப்பட்டது. வரவுசெலவுத் திட்ட துண்டுவிழும் தொகையாக 625 பில்லியன் ரூபாய் அமைந்துள்ளது.

எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் வருமாறு,

05:06 PM – 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாசிப்பு நிறைவுபெற்றது  Read more

budgetசுதந்திர இலங்கையின் 70ஆவது மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் 3ஆவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவால் பாராளுமன்றத்தில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும், வகையிலான வரவு செலவுத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். Read more

election.....முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைபற்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை மீண்டும் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டின் மார்ச் 17ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், பல்வேறு காரணிகளால் தேர்தல்கள் செயலகத்தினால் தேர்தலை பிற்போட நேரிட்டது. குறிப்பிட்ட இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்கள் தொடர்ந்தும் செல்லுபடி தன்மையுடன் காணப்படுகின்றன. Read more

atmவவுனியாவில் பல காலமாக வங்கிகளிலுள்ள இலத்திரனியல் பணப்பறிமாற்றத்தில் (ஏ.ரி.எம்) கொள்ளையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் நால்வரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் அண்மைக் காலங்களாக வங்கியிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரங்களில் பணம் கொள்ளையிடப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ. பெரேரா தலைமையில் பொலிஸார் இரகசியமாக விசாரணைகள் மேற்கொண்டு வந்துள்ளனர். Read more

welikada.....வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொல்லப்பட்டடமை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைச்சாலை கைதிகளுக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தின் பின்னணி தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

ranilஅம்பாறை, இறக்காமம், மாணிக்கமடு, மாயக்கல்லிமலை பிரதேசத்தில் பலாத்காரமாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை, ஒருவார காலத்துக்குள் அங்கிருந்து அகற்றப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அலரி மாளிகையில், அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே, பிரதமர் மேற்கண்ட வாக்குறுதியை வழங்கியுள்ளார். Read more

former-ltteபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஷ்வரனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் டிசம்பர் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நடராஜா சபேஷ்வரன் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். Read more

arrestபல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்றுக்காலை யாழ்ப்பாண பொலிஸாரால் யாழ் புகையிரத நிலையத்தில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சசிகலா என்ற குடும்பப் பெண் இலங்கை பூராகவும் பலதரப்பட்ட பண மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் குறித்து பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

ewrerமட்டக்களப்பு கொம்மாதுறைப் பிரதேசத்தில் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்குண்டுகள் தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்திற்குச் சென்று அக் குண்டுகளை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்மாதுறைத் தீவுப் பகுதியில் பனை மரம் ஒன்றுக்கு அருகில் பிளாஸ்டிக் போத்தல் ஒன்றினுள் இக்குண்டுகள் பாதுக்காப்பாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

sdfddssசெங்கற்களால் நிர்மாணிக்கப்பட்ட புராதன இந்து கோயிலொன்று திருகோணமலை சேருவில பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை யுகத்திற்குரிய சிவன் கோயிலொன்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொல்பொருளியல் திணைக்களத்தின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்போது இந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். Read more