ewrerமட்டக்களப்பு கொம்மாதுறைப் பிரதேசத்தில் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்குண்டுகள் தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்திற்குச் சென்று அக் குண்டுகளை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்மாதுறைத் தீவுப் பகுதியில் பனை மரம் ஒன்றுக்கு அருகில் பிளாஸ்டிக் போத்தல் ஒன்றினுள் இக்குண்டுகள் பாதுக்காப்பாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.