budgetசுதந்திர இலங்கையின் 70ஆவது மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் 3ஆவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவால் பாராளுமன்றத்தில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும், வகையிலான வரவு செலவுத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பிரிவினரின் கருத்துக்களை உள்வாங்கி, இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறியிருந்தார்.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை அன்று மாலை 5மணிக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், டிசம்பர் 10 ஆம் திகதி வரை விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.