sdfddssசெங்கற்களால் நிர்மாணிக்கப்பட்ட புராதன இந்து கோயிலொன்று திருகோணமலை சேருவில பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை யுகத்திற்குரிய சிவன் கோயிலொன்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொல்பொருளியல் திணைக்களத்தின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்போது இந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 11ஆம் 12ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கக் கூடும் எனவும் முழுமையாக செங்கற்களால் கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோயிலானது மிக பாதுகாப்பான முறையில் காணப்பட்டதாகவும், அதன் அகழ்வுப் பணிகளை துரிதப்படுத்தி புனரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த சிவன் கோயிலின் புனரமைப்பு பணிகள் நிறைவுசெய்யப்படும் எனவும் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.