புதிய அரசியலமைப்பு தொடர்பான செயற்பாடுகளின் ஊடாக சித்தார்த்தன் போன்றவர்களுக்கு தலைவர் பதவிகளை வழங்கி நாட்டினை பிளவுபடுத்தும் செயற்பாட்டினை இந்த அரசாங்கம் முன்னெடுப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய பிக்குகள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை கொழும்பு 07 இல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தேசப்பற்றுள்ள தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவரான பென்கமுவே நாலகதேரர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தினை அரசியலமைப்புச் சபையாக மாற்றி இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தற்போது இந்த அரசியலமைப்பு சபையில் 6 உபகுழுக்கள் அமைக்கப்பட்டு அரசியலமைப்பு செயற்பாடுகளை இந்த அரசாங்கம் இரகசியமாக முன்னெடுத்து வருகிறது. Read more