இலங்கையில் வெளிநாட்டவர்கள் காணி வாங்குவதற்காக போடப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையை பொறுத்த வரையில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பணத் தேவை அதிகம் தேவைப்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2014இல் வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணி, வீடுகள் வாங்குவதைத் தடைசெய்யும் சட்டம் அமுலுக்கு வந்தது.