jonstonசொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை வழங்காமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, வெளிநாடு செல்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்தார். 2010 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதிக்கான சொத்து விபரங்கள் வெளியிடாமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக அவருக்கு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை சிங்கப்பூருக்கு செல்வதற்காக அவர் விடுத்திருந்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு அந்த தடையை தற்காலிகமாக அகற்றுவதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.