mahinda desapriya (3)வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னதாக அதனை செய்து கொள்ள முடியும் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகையில், பெயர் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கம் சரியான முறையில் இடாப்பில் பதியப்படாதிருந்தாலோ அல்லது வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டியதிருந்தாலோ அதனை திருத்திக்கொள்ளவதற்கு தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னதாக இவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களுக்கான இடாப்புக்கள் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும், அந்தந்த கிராம சேவை பிரிவுகளிலும் இந்த மாதம் 8ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவரின் பெயர் உள்ளடக்கப்படாமல் இருந்தால் அதனை சேர்க்க முடியாது எனவும் பெயர் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் திருத்தங்கள் இருந்தால் அந்த திருத்தங்களை செய்ய முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.