Header image alt text

SC proposed on the lines of Constitutional Court

TNA-led House Committee recommendations out

November 10, 2016, 10:31 pm 

By Shamindra Ferdinando

sadsdsAn eleven-member parliamentary Sub-Committee has recommended the setting up of a Constitutional Court to settle disputes between the government and the regions (Provinces) as well as among the regions (Provinces).

The Sub-Committee headed by TNA MP Dharmalingam Siddarthan has asserted that Constitutional Court was required as powers currently enjoyed by Governors would be abolished.

The Sub-Committee on Centre-Periphery Relations has proposed the Constitutional Court to be represented by all communities, the Federation of National Organizations (FNO) alleged yesterday. Read more

arrest (30)யாழ். பல்கலைகழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கடந்த மாதம் 25ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின்போது, கிளிநொச்சியில் அமைதியின்மையை தோற்றுவித்தவர்கள் என கூறப்பட்டு சிலர் தற்போது கைதுசெய்யப்பட்டு வருகின்றார்கள்.

இதுவரை மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களையும் கைதுசெய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை ஆதரமாக கொண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. Read more

mangalaஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் ஊடகங்களின் ஊடாக அல்லாமல் நேரடியாக தமது அமைச்சுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்த்து கொள்ளுமாறு சீன தூதுவருக்கு ஆலோசனை வழங்கியதாக அமைச்சர் மங்கள சமர வீர தெரிவித்துள்ளார்.

த இந்து செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நிதியமைச்சருக்கும் சீன தூதுவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார். Read more

samimalaiஅம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை – பெயார்லோன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 29 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

சாமிமலை சின்ன சூரியகந்தத் தோட்ட லயன் குடியிருப்பில் வசித்து வந்த எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டு சிறுவர் நிலையம் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை, பெய்த கடும் மழையினால் குறித்த லயன் குடியிருப்புப் பகுதியில் 30 மீட்டர் தூரம் வரையில் வெடிப்புடன் மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே, பாதுகாப்பின் நிமித்தம் இவர்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். Read more

aarpattamதிருகோணமலை பொது வைத்தியசாலை தாதியர்கள் இன்றுகாலை 9.30 மணிமுதல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வளாகத்தில் தாதியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வைத்திய அதிகாரியொருவர் தாதியொருவரை பொது இடத்தில் வைத்து தூற்றியதாகத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தாதியர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

mcயாழ் மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இன்று ஆறாம் நாளாகவும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 10 வருடங்களாக தொழிலில் ஈடுபடும் தம்மை நிரந்தரமாக்க கோரி கடந்த திங்கட்கிழமை முதல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்துள்ளனர். தற்காலிக பணியாளர்கள் 127 பேருக்கும் நியமனம் கிடைக்கும் வரை இப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் குறித்த பணியாளர்கள் தெரிவித்தனர். Read more

robberyயாழ். கரவெட்டிப் பகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி விக்கினேஸ்வரா வீதி, சண்டிக்குளம் பகுதியில் உள்ள குறித்த வீட்டினை நேற்றுக் காலை பூட்டி விட்டு சென்றவர்கள் முற்பகல் 10 மணியளவில் வீட்டிற்கு திரும்பியபோது வீடு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளமை தெரியவந்தது. Read more