Header image alt text

w3புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மாலதி நடராஜா அவர்கள் தங்களது மகன் செல்வன் றிசி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு முல்லைத்தீவின் முள்ளியவளையில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்து 108 சிறார்களுக்கு புத்தாடைகள் தைப்பதற்காக 209 ஊழவவழn துணிகள் மற்றும் 144 முயனெழள என 50,000 ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

தங்களது பிள்ளையின் பிறந்த தினத்தில் இல்ல சிறார்களையும் மகிழ்விக்கும் முகமாக இவ் கைங்கரியம் ஆற்றிய றிசி அவர்களின் பெற்றோருக்கு இல்ல சிறார்கள் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்வதுடன் இந் நன்னாளில் செல்வன் றிசி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).
Read more

china-ambasadorஅண்மையில் தாம் வெளியிட்டகருத்துகள் இலங்கை அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அண்மையில் சீனத் தூதுவர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு, கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதிக வட்டிக்கு கடன் கொடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு அதிக வட்டியை சீனா அறவிடுகிறது என்றால், எதற்காக மீண்டும் சீனாவிடம் கடன் கேட்கிறார்கள் என்றும் சீனத் தூதுவர் கேள்வி எழுப்பியிருந்தார். Read more

thavarasaவட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவை பதவி நீக்கம் செய்து, அப் பதவியை மற்றொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

இது குறித்த கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அதில் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் தவநாதனுக்கு அப்பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

parliamentபாராளுமன்றத்திலுள்ள சகல உறுப்பினர்களினதும் விரல் அடையாளங்களை பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு வழங்குமாறு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெறும் வாக்கெடுப்புக்களைப் பதிவு செய்வதற்கு நவீன தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்றத்தில் இடம்பெறும் வாக்கெடுப்புக்களின்போது, சபை உறுப்பினர்கள் தங்களது விரல் அடையாளத்தைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் எனவும் அவர் அறிவித்தல் விடுத்தார்.

mcயாழ். மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் கடந்த ஏழு நாட்களாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தால் நகரம் பெரும் குப்பைமேடாக மாறியுள்ளதுடன், நோய்த் தொற்றுக்களும் ஏற்படும் அபாயத்தையும் எட்டியுள்ளது.

யாழ். மாநகர சபைக்குட்பட்ட சந்தை தொகுதிகள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், வீதிகள், கழிவு நீர் வாய்க்கால்கள் ஆகிய இடங்களிலே இவ்வாறு குப்பைகள் தேங்கி கிடந்து பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. Read more

arrest (2)முல்லைத்தீவு மாந்தைகிழக்கு விநாயகபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த யோகராஜா விதுசன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாற கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

navuru......அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிச் சென்று, நௌரு மற்றும் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் மீள்குடியேற்ற உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கமைய, நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read more