முல்லைத்தீவு மாந்தைகிழக்கு விநாயகபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த யோகராஜா விதுசன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாற கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் அவரது வீட்டிற்குச் சென்ற பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிசார் அவரை கைதுசெய்து சென்றதற்கான கடிதத்தினை அவரது குடும்பத்தினரிடம் கையளித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்குகொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதி கடையொன்றில் வேலைசெய்து வந்ததாகவும் குறித்த இளைஞருக்கு ஆவா குழுவுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்றும் அதனடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.