navuru......அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிச் சென்று, நௌரு மற்றும் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் மீள்குடியேற்ற உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கமைய, நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஈராக் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒரு பகுதியினரே அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2017ஆம் ஆண்டு, ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக, இந்தக் குடியேற்றம் இடம்பெறலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.