தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றுமாலை நிதியமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வரவுசெலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானித்திருந்தனர். Read more