sampanthanஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல தாம் தயாராக இருப்பதாகவும், சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில், ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள, பிரேரணையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ட்ரம்சுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக இரா.சம்பந்தன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.