mahinda (4)வடக்கு கிழக்கிலுள்ள பௌத்தர்களையும், பௌத்த அடையாள சின்னங்களையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

அளுத்கமபகுதியிலுள்ள விகாரையொன்றில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அநேகமான இடங்களில் விகாரைகள் மூடப்பட்டு வருகின்றன. வடக்கில் அது வேகமாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பிரிந்திருந்த வடக்கு கிழக்கை தாமே ஐக்கியப்படுத்தியதாக குறிப்பிட்ட மகிந்த ஆனால் அங்கு விகாரைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை சாதாரண விடயமாக கருதிவிடமுடியாது.

இதுகுறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும், அதேவேளை நல்லிணக்கம் என்பது அவசியம் தான் எனவும் ஆனால் அது ஓர் எல்லைக்கு ஒரு பிரதேசத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது என கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்தர்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இவர்களை பாதுகாக்க வேண்டிய அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அத்துடன் அவர்களின் அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார் அவர்.