மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தினை முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றுகாலை முன்னெடுக்கப்பட்டது.
இன்றுகாலை 8.30மணியளவில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் பட்டிப்பளை பிரதேச சிவில் சமூக அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச செயலக வாயில் கதவினை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொக்கட்டிச்சோலை-வெல்லாவெளி பிரதான வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more