முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுண கட்சியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இடதுசாரிக் கட்சிகள் சில இணைந்து இன்று கொழும்பில் மேற்கொண்ட ஊடகவிலாளர் சந்திப்பின் போதே இதனைக் கூறியுள்ளனர். தான் மற்றும் வாசுதேவ நாணயக்கார, டிவ் குணசேகர உள்ளிட்டோர் இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக திஸ்ஸ விதாரண இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.