அம்பாறை மாவட்டம் பொத்துவில் உடும்பிகுளம் பகுதியில் மரப்பொந்தொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் கைக் குண்டுகள், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் அருகம்பை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, மைக்ரோ துப்பாக்கி, மகசீன்கள் இரண்டு, 9 மில்லி மீற்றர் ரவைகள் 73 மற்றும் பல்வேறு வகையான கைக்குண்டுகள் ஆறும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. யுத்த காலத்தில் புலிகளால் இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.