சிலாபம் மாதம்பே பகுதியில் பாழடைந்த பகுதியில் இருந்து 130 மில்லிமீற்றர் ரக பழைய மோட்டார் குண்டுகள் 2 பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மோட்டார் குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக புத்தளம் விசேட அதிரடிப்படை முகாமுக்கு ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 மோட்டார் குண்டுகளை குறித்த இடத்திற்கு கொண்டு வந்த நபரை தேடி பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்ததுள்ளனர்.