malayaபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் சைச்சாத்திட்டு ஒருமாதம் கடந்துள்ள நிலையில் தோட்ட தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 தொடக்கம் 20 கிலோ வரை கொழுந்து பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இருந்து பேரணியாக ஆரம்பித்து ஹட்டன் D.K.W. கலாசாரமண்டபம் வரை சென்றனர்.

இந்த ஆர்பாட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம், செந்தில் தொண்டமான், மத்திய மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்ட பேரணி நிறைவடைந்ததன் பின்னர் னு.மு.று. கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது உறையாற்றிய ஆறுமுகன் தொண்டமான்,

தேயிலை கொழுந்து பறிக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வழமைபோல் பறிக்கும் தேயிலை கொழுந்தை பறிக்கும்படியும், தோட்ட நிர்வாகத்தால் வலியுறுத்தபடுகின்ற 18 அல்லது 20 கிலோ பறிக்க வேண்டாமெனவும் மக்களுக்கு ஆறுமுகன் தொண்டமான் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை மேலதிக கொடுப்பனவுக்கு 140 ரூபா, வரவுக்கான கொடுப்பனவு 60 ரூபா, தேயிலைக்கான கொடுப்பனவு 30 ரூபா என்ற அடிப்படையில்தான் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழுந்து குறைவான காலப்பகுதியில் தோட்ட நிர்வாகங்கள் மேலதிகமாக கொழுந்து பறிக்குமாறு அறிவித்தால், தோட்ட நிர்வாகமும் தோட்ட தலைவர்களும் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வருமாறு நான் முன் கூட்டியே அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை மறுத்து தோட்ட நிர்வாகம் செயல்பட்டால் தோட்டப் புறங்களில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலைதூளை கொழும்புக்கு ஏற்றவிடாமல் தடுக்குமாறும் தெரிவித்தார்.

கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை மதிக்கத் தெரியாதவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இலங்கை தொழிலாளர் காங்ரஸ் நடவடிக்கை எடுக்குமெனவும் ஆறுமுகன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

malayga-thonda