Header image alt text

wdere

maithriஇலங்கையில் இனவாதம் பேசுபவர்களுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் மா அதிபருக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு கூடிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய கலந்துரையாடல் மற்றும் சக வாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். Read more

gnanasara-theroநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் மீதான வழக்கை எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சட்ட மா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. Read more

budget-22017 ஆம் ஆண்டுக்கான வரவசெலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. அதன்படி வரவசெலவு திட்டத்திற்கு ஆதரவாக 162 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் கிடைத்தன.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீPலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

கூட்டு எதிர்க்கட்சியினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் எதிராக வாக்களித்தனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.