mcslஐ.எஸ். அமைப்பில் 32 இலங்கையர் இணைந்துள்ளதாக பாராளுமன்றில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று தெரிவித்த தகவலுக்கு முஸ்லிம் கவுன்சில் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பொது மக்களை தவறாக வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐஎஸ் அமைப்பில் இணைந்து உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்ததாகவும், அதன்பின்னர் ஐஎஸ் உடன் தொர்புடைய இலங்கையர் குறித்த எவ்வித உறுதியான தகவல்களும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அமைச்சர் குறிப்பிட்ட போன்று ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஆகியன இணைந்து புலனாய்வுப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு வருடம் பழமையான விடயத்தை விஜயதாஸ ராஜபக்ஷ கூறியிருப்பதன் மூலம் இனவாதிகளுக்கு ஆதரவு வழங்குவதாக அமையும் என்று முஸ்லிம் கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இது தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை நடத்துமாறு முஸ்லிம் கவுன்சில் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜ.எஸ் அமைப்பில் இணைந்ததாக கூறப்படும் நபர்கள் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உலமா சபை உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓத்துழைப்பு வழங்கும் என்றும் சிறீலங்கா முஸ்லிம் கவுன்சில் கூறுகின்றது.

இலங்கை முஸ்லிம்களுக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில்லை ரிஷhத் பதியுதின்
 
உலக பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் ஐ.எஸ் அமைப்புடன் இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் அமைப்போ அல்லது தனி நபரோ தொடர்புகள் வைத்திருக்கவில்லை.  அந்த அமைப்புக்கு உடந்தையாகவோ அல்லது ஆதரவாகவோ இருக்க மாட்டார்கள்.
விஜயதாஷ ராஜபக்ஸ, இலங்கையின் 4 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
32 பேர் இணைந்ததாக கூறப்படுவது, தான் அறிந்த வரையில் இரு வருடங்களுக்கு முன்னதாக நடந்ததாக இருக்கலாம் என்றார் .
முஸ்லிம்கள் மீது வீண் பழி சுமத்துவதாகவும் ரிஷhத் பதியுதின் குறிப்பிட்டார்.