இலங்கை கண்டியில் அங்கும்புர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். அதுகுறித்து, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து ரி56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கண்டி – அங்கும்புர பெபிலகொல்ல முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் கார் ஒன்றில் வந்த சிலர், வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். Read more