இலங்கையில் மின்சார ரயில் சேவையை அறிமுகம் செய்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க கூறுகையில், கடந்த ஜூலை மாதமளவில் இதற்கான வேலைத்திட்டத்தினை எதிர்பார்க்க நாம் ஆரம்பித்துள்ளோம். களனிவெளி ரயில் பாதை மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்வது இலக்காகும் இலங்கையில் மின்சார ரயிலை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூற்று அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.