இந்த நாட்டிலே தமிழ் மக்களின் இருப்பை நிலை நிறுத்த கூடியவர்கள், எமது மாணவச்செல்வங்களே என வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்கள் இந்த நாட்டிலே ப்ரிட்டிஷ் காலத்திலும் சரி 1970 வரை அரசாங்கத்தின் மிக முக்கிய உயர் பதவிகளில் தமிழ் அதிகாரிகளே கடமையாற்றி இருந்தார்கள். இலங்கை அரசியல் அமைப்பின் மாற்றத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழ் அதிகாரிகளின் நியமனம் படிப்படியாக இன நோக்கோடு ஒதுக்கப்பட்ட நிலையே இன்று வரை நிலவுகின்றது. இதற்கும் அப்பால் தமிழ் சமூகத்தின் கல்வியானது 30 ஆண்டுகளுக்கும் மேலாக யுத்த சூழ்நிலையில் பின்தங்கிய நிலை மற்றும் இடப்பெயர்வு காரணமாக இன்றைய அரசில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஓர் சிலர் மாத்திரமே உயர் பதவிகளில் அங்கம் வகிக்கின்றனர்.
எனவே அன்பார்ந்த மாணவச்செல்வங்களே எமது நாட்டில் தலை நிமிர்ந்து கௌரவமாக வாழ்ந்த எமது தமிழினம் மீண்டும் ஒருமுறை தலை நிமிர வேண்டுமானால் அது கல்வியால் மாத்திரமே முடியும்.
இதற்கு பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என மூவருமாக ஒன்றாக இணைந்து செயற்படுவதே எமது இனத்திற்கு நீங்கள் செய்கின்ற வரலாற்று கடமையாகும் என நம்புகிறேன் உங்களுக்கு பக்க பலமாக நாங்கள் என்றும் இருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.