Header image alt text

Solution is Federalism: Siddharthan

Posted by plotenewseditor on 23 November 2016
Posted in செய்திகள் 

(by Kelum Bandara)

dailymirror-newspaper-interview-22-11-2016-d-sithadthan-m-1Tamil National Alliance (TNA) MP for the Jaffna District Dharmalingam Siddharthan speaks about the political solution, the aspirations of the Tamils and the way forward. In an interview with the Daily Mirror, he says that they need a Federal System of Government. Excerpts:

 How do you, as a Tamil politician who had links with the previous rule, see the change after the new Government assumed office?

We did not have any links with that Previous Government as such because we did not have Parliamentary representation at that time. We never directly supported the Government. Yet, till the end of the war, we were under threat from the LTTE. So, we had some sort of relationship with the armed forces. We needed it to protect our cadres. Read more

german-help-to-victor-22-11-2விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் நேற்று (22.11.2016) செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் மேற்குப் பகுதியைச் சேர்ந்த

புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினரான தொம்மை விக்டர் (ஓட்டி விக்டர்) என்வருக்கு 22,350/- ரூபா பெறுமதியான நண்டு பிடிக்கும் தொழிலுக்கான தங்கூசி, வலை, கயிறு மற்றும் ஈயம் என்பவனவற்றை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் வாழ்வாதார உதவியாக வழங்கியுள்ளனர்.

மறைந்த ஜேர்மன் கிளை உறுப்பினர் கார்த்திகேசு சிவகுமாரன் (தோழர் சுப்பர்)அவர்களின் முதலாம் வருட நினைவையொட்டி இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது. Read more

american shipஅமெரிக்க கடற்படை மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான கூட்டு கடற்படை பயிற்ச்சி நடவடிக்கைகள் திருகோணமலை கடற்பரப்பில் ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்க இலங்கை கூட்டுப் படைகளில் உறவை பலப்படுத்த இந்த முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்தில் இருந்து இதுவரையில் 95 போர்க்கப்பல்கள் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கை மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையிலும் இருநாட்டு உறவை பலபடுத்தும் வகையிலும் கடற்படை கூட்டுப்பயிற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more

bavanகடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மகராம விகராதிபதி அம்பிபிட்டிய சுமணரத்தின தேரர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எமது கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்பையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்ட பௌத்தமதத்தின் துறவி ஒருவர் மேற்கொண்டு வருகின்ற நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட பேச்சுகளும், சட்டத்தை மீறிய நடவடிக்கைகளும், பௌத்தர்கள் என்று தம்மை பெருமையாக கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளும், சமுகப்பிரமுகர்களும், சமயத்த்தலைவர்களும், வெட்கப்படவேண்டிய விடயங்களாகும். அரசஅதிகாரிகள், காவல்த்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவு என எதனையும் மதிக்காத பண்புகளை ஒரு பௌத்த துறவி வெளிப்படுத்தி வருகின்றார் எனின்அவர்மீது அவர் மதம்சார் நிறுவனங்கள் மற்றும் மதபீடங்கள் எந்த விதமான ஒழுங்குநடவடிக்கைகளும் எடுக்காததே மிகவும் பிரதானமான காரணமாகும். Read more

amal-mpபுதிதாக உருவாக்கப்படும் அரசியல் தீர்வில் பௌத்த மதத்துக்கு கொடுக்கப்படும் சகல சலுகைகளும் இந்து மதம் உட்பட சகல மதங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று செங்கலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் மதகுரு என்ற போர்வையில் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கை காரணமாக எங்களுடைய இந்த நாட்டின் சரித்திரத்தில் இந்து மதகுருக்கள் தங்களுடைய பிரச்சினைகளை சொல்வதற்கு வீதிக்கு வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Read more

jaf.university (2)யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த சீருடை தரித்த பொலிஸார், பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நள்ளிரவில், சக மாணவர் ஒருவருடைய பிறந்தநாளை பல்கலைக்கழக வளாகத்துள் வைத்து மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். இதன்போது, ஆயுதங்களுடன் பல்கலைக்கழக வளாகத்துள் நுழைந்த சீருடை தரித்த பொலிஸார், ‘இவ்வாறான கொண்டாட்டங்கள் எவையும் இங்கு இடம்பெறக்கூடாது’ என தெரிவித்துள்ளனர். Read more

busமுறையான அனுமதிப் பத்திரம் இன்றி பயணிகள் பஸ்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

ஆபத்துக்களில் இருந்து பயணிகளை காப்பாற்றவும், தரமான பஸ் போக்குவரத்துக்களை அபிவிருத்தி செய்யவும், தற்போது காணப்படும் சட்டத்தினை மேலும் வலுவூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more

act-justiceஉயர்நீதிமன்ற நீதியரசர் பிரயசாத் டேப் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோனும் உடனிருந்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

courtsஓய்வுப் பெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.என்.சரத்சந்திரவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு சொந்தமான ஜீப் வண்டியை மோடியாக பாவித்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்செய்தபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.