american shipஅமெரிக்க கடற்படை மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான கூட்டு கடற்படை பயிற்ச்சி நடவடிக்கைகள் திருகோணமலை கடற்பரப்பில் ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்க இலங்கை கூட்டுப் படைகளில் உறவை பலப்படுத்த இந்த முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்தில் இருந்து இதுவரையில் 95 போர்க்கப்பல்கள் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கை மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையிலும் இருநாட்டு உறவை பலபடுத்தும் வகையிலும் கடற்படை கூட்டுப்பயிற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ். சொமசெற் கப்பலை இலங்கை கடற்படையினர் கலாசார அடிப்படையில் வரவேற்றதுடன் இரு நாட்டு கடற்படையினர் இடையில் விசேட கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.

இந்நிலையில் மூன்று நாட்கள் கடற்டை கூட்டுப் பயிட்சிகளையும் மேற்கொள்ளவுள்ளனர். இன்று ஆரம்பமாகிய இந்த கூட்டு கடற்படை பயிற்ச்சிகள் நாளை முடிவடைகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.