Header image alt text

d-sithadthan-m-p“மாகாணத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் அதனை எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதையிட்டும் ஆராய்ந்து அறிக்கை தரவேண்டும் என்பது தான் எமக்குத் தரப்பட்ட ஆணை. அதிகாரப் பரவலாக்கல் எவ்வாறு அமையவேண்டும்,

அதிகாரப் பரவலாக்கல் அலகு, அரசாங்கத்தின் தன்மை என்பனவற்றை வழிநடத்தல் குழுவே ஆராய்ந்து அறிக்கை தரும். அவை தொடர்பில் ஆராயும் பொறுப்பு எமக்குத் தரப்படவில்லை” என அரசியலமைப்பு நிர்ணய சபையின் உப குழுவின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பு உப குழுவின் பரிந்துரையில் அரசின் தன்மை குறித்து அதாவது, ஒற்றையாட்சியா சமஷ்டியா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. Read more

maithri ranilதற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கம் இல்லை என உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்ய, உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனுவை சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்திருந்தார். தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து நிறுவப்பட வேண்டும் என அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. Read more

NPC (4)மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி, தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டமைக்கும், அரச அதிகாரியான கிராமசேவையாளருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தபோதும் அதற்கு பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது இருந்தமையையும் கண்டித்து

இவ்வாறான சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரைக் கோரும் பிரேரணை வடமாகாண சபையில், இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.