தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கம் இல்லை என உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்ய, உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனுவை சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்திருந்தார். தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து நிறுவப்பட வேண்டும் என அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினை இணைத்து நிறுவிய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் எனக் கூறமுடியாது எனவும், மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.