Header image alt text

November 23, 2016, 12:00 pm 

fger“What is remarkable is that in discussing the devolution of power in a situation where the existing system of devolution was based on the Indian model, the entire report of the Subcommittee on Centre-Periphery Relations has not mentioned India even once!”

By C. A. Chandraprema

The Provincial Governor

The report submitted to the Constitutional Assembly by its Subcommittee on Centre-Periphery Relations focuses on several areas such as the role of the provincial Governor, and the fiscal, administrative, land and police powers of the provincial councils. What the subcommittee report says about the institution of the provincial governor is plain and direct as follows: “The present powers of the Governors are excessive and should be curtailed. The Thirteenth Amendment and the Provincial Councils Act No. 42 of 1987 vests a multitude of powers to the unelected Governor to intervene, control and regulate the executive and legislative functions of the provinces. The position of the Governor with such powers represents central dominance in the province…”
Read more

tna-mpsஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இதில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களட கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,

இச்சந்திப்பின்போது வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், வட கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளல் மற்றும் புதிய அரசியல் சாசனம் ஒன்றை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
Read more

lanka-e-newsலங்கா ஈ நியுஸ் செய்தியாசிரியர் சந்தருவன் சேனாதீரவை சர்வதேச பொலிஸார் மூலம் உடனடியாக கைதுசெய்வதற்கு கம்பஹா பிரதான நீதவான் காவிந்தியா நாணயக்கார இன்று உத்தரவிட்டுள்ளார்.

ரிவிர செய்தித்தாளின் முன்னாள் செய்தியாசிரியர் உபாலி தென்னகோனை தாக்கிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாள அணிவகுப்புக்கு நிறுத்துவதற்கு முன்பாக அவரின் புகைப்படத்தை லங்கா ஈ நியுஸ் இணையத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பாக சந்தருவன் சேனாதீரமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Read more

karikalanயாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும், மாவீரர் தினத்தை நினைவூட்டும் வகையிலும் இன்று சுவரொட்டிகள், ஒட்டப்பட்டுள்ளன.

நவம்பர் 27ஆம் திகதி அனுஸ்டிக்கப்படும் மாவீரர் தினம், மற்றும் 26 ஆம் திகதி புலிகளின் தலைவருடைய பிறந்த நாள் என்பவற்றை கொண்டாடும் வகையிலான ‘இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கரிகாலன்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளும் மாவீரர் தினத்தை நினைவுகூரும் வகையிலான சுவரொட்டிகளும் பல்கலைகழக வளாகத்தில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. Read more

avant gardeகாலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்க காலி நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி குறித்த கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் உரிய நிறுவனத்திடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவன்காட் கப்பல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் காலி துறைமுகத்திற்கு அருகில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

lasanthaசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை இராணுவப் புலனாய்வு அதிகாரிகளே படுகொலை செய்தனர் என, குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆய்வாளர் நிசாந்த சில்வா, கல்கிசை நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

படுகொலை நடந்தபோது, லசந்த விக்கிரமதுங்கவின் வாகனத்தைச் செலுத்திய சாரதியைக் கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி தொடர்பான விசாரணை அறிக்கையை கல்கிசை நீதிவான் மொகமட் சகாப்தீனிடம் சமர்ப்பித்த போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more